.webp)
Colombo(News1st) புதிய கல்வி சீர்த்திருத்திற்கமைய ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, மினுவங்கொட மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
சிறுவர்களின் ஆரம்ப கல்வி முக்கியமாக இருந்தாலும் அதற்குரிய முறைமையொன்று இல்லையென பிரதமர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படுவதாகவும் மே மாதத்திலிருந்து புதிய பாடத்திட்டத்திற்கான ஆசிரியர் மட்ட பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் கூறினார்.