யுக்ரேன் மீதான தாக்குதல் நிறுத்த வேண்டும்; ட்ரம்ப்

யுக்ரேன் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்; ட்ரம்ப் தெரிவிப்பு

by Staff Writer 25-04-2025 | 10:17 AM

Colombo (News1st)யுக்ரேன் மீதான தாக்குதல்களை ரஷ்ய ஜனாதிபதி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி தமது Truth சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

யுக்ரேன் மீதான தாக்குதல்கள் மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல எனவும் ரஷ்ய - யுக்ரேன் போரை நிறுத்துவதற்கு 2 நாடுகளுக்கும் அழுத்தம் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவினால் யுக்ரேன் தலைநகர் மீது நேற்று நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்தனர்.