.webp)
Colombo (News1st)நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான இறுதி நாள் இன்றாகும்(25).
பொதுமக்கள் அஞ்சலிக்காக பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் தொடர்ந்தும் மூன்றாவது நாளாகவும் வைக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் நேரப்படி இன்றிரவு 7 மணியுடன் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான காலம் நிறைவடையவுள்ளது.
அதனை தொடர்ந்து நல்லடக்க ஆராதனை வத்திக்கான நேரப்படி நாளை(26) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டமைக்கு அமைய புனித மரியாள் மெஜோரி பேராலயத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.