.webp)
Colombo (News 1st) உலக மலேரியா தினம் இன்றாகும்.
மலேரியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உயிருக்கு ஆபத்தான நோயைக் கட்டுப்படுத்தி அதனை முழுவதுமாக ஒழிக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் வருடாந்தம் ஏப்ரல் 25ஆம் ஆண்டு உலக மலேரியா தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
"மலேரியா எம்முடன் முடிகிறது, மீண்டும் முதலீடு செய்யுங்கள், மீண்டும் கற்பனை செய்யுங்கள், மீண்டும் எழுச்சி பெறுங்கள்'' என்பதே இம்முறை உலக மலேரியா தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.
1990ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் 2 தசாப்தங்களுக்கு மேலாக 12.7 மில்லியன் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.
மலேரியாவை ஒழிக்கும் முயற்சிகளை வானிலை மாற்றம், உள்நாட்டு மோதல்கள், மனிதாபிமான அவசர நிலைமை மற்றும் பொருளாதார அழுத்தங்கள் உள்ளிட்ட காரணிகள் சீர்குலைப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு உடனடி சிகிச்சைகள் வழங்கத்தவறினால் மீண்டும் கடுமையான நோய்த்தாக்கம் ஏற்படுவதுடன் இறப்புகளும் அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.