85 வாக்காளர் அட்டைகளுடன் மாநகர சபை வேட்பாளர் கைது

85 வாக்காளர் அட்டைகளுடன் மாநகர சபை வேட்பாளர் கைது

by Staff Writer 24-04-2025 | 12:46 PM

Colombo (News 1st) சர்வஜன அதிகாரம் கட்சியின் புத்தளம் மாநகர சபைக்கான வேட்பாளரொருவர் 85 வாக்காளர் அட்டைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால் விநியோகிக்கப்பட்ட வாக்காளர் அட்டைகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் - ரத்மல்யாய பகுதியில் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வாக்காளர் அட்டைகள், தபால்காரரால் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன் சந்தேகநபரான தபால்காரர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.