.webp)
Colombo (News1st) நாடளாவிய ரீதியில் கடந்த 13ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட 300 போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 299 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ் மாஅதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது ஹெரோயினுடன் 121 பேரும் ஐஸ் போதைப்பொருளுடன் 86 பேரும் கஞ்சாவுடன் 84 பேரும் போதைவில்லைகளுடன் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.