ஈஸ்டர் தாக்குல் அறிக்கை CID-யிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை CID-யிடம் கையளிப்பு ; விசாரணைக்கு விசேட குழு

by Staff Writer 20-04-2025 | 5:59 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இன்று(20) முற்பகல் கையளிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி செயலாளர் நந்தித சனத் குமாநாயக்கவினால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 2019 செப்டம்பர் 22ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.