.webp)
Colombo (News1st) ஸ்ரீ தலதா மாளிகையில் புனித சின்னத்தை வழிபடும் நிகழ்வை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(18) ஆரம்பித்து வைத்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலுள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை ஜனாதிபதி வழிபட்டார்.
இன்று ஆரம்பமான ஸ்ரீ தலதா புனித சின்ன காட்சிப்படுத்தலில் புத்த பகவானின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கண்டி நகரில் கூடியுள்ளனர்.