தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தலிபான் நீக்கம்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து தலிபான் நீக்கம்

by Staff Writer 18-04-2025 | 3:24 PM

Colombo (News1st)இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தடை செய்யப்பட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்த தலிபான் அமைப்பை பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.

ரஷ்ய உயர் நீதிமன்றத்தினால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இரண்டு தசாப்த காலப் போருக்குப் பின்னர் அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய போது 2021 ஆம் ஆண்டு ​​ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் ரஷ்ய உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நடவடிக்கை தலிபான்களுக்கு ஒரு இராஜதந்திர வெற்றி என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தலிபான் அமைப்பை 2003 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்தது.

இதனால் தலிபான்களுடனான எந்தவொரு தொடர்பும் ரஷ்ய சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.