"ஐரோப்பாவுடன் உறுதியாக வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்

"ஐரோப்பாவுடன் உறுதியாக வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும்" - ட்ரம்ப் தெரிவிப்பு

by Staff Writer 18-04-2025 | 6:05 PM

Colombo (News1st) ஐரோப்பாவுடன் உறுதியாக வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஐரோப்பா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இத்தாலிய பிரதமருக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பினால் புதிய வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியான பின்னர் அவரை ஐரோப்பிய நாடொன்றின் தலைவரொருவர் சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.