Shakthi Crown Season II : குரல் தேர்வு ஆரம்பம்

by Staff Writer 16-04-2025 | 5:47 PM

Colombo (News 1st) இலங்கையின் பாடகர்களை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் மாபெரும் இசை நிகழ்ச்சியின் இரண்டாம் அத்தியாயத்திற்கான குரல் தேர்வு கொழும்பில் இன்று(16) ஆரம்பமானது.

இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் பிரம்மாண்ட ரியாலிட்டி போட்டி நிகழ்ச்சியாக Shakthi Crown திகழ்கின்றது.

அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்கவர் புதுமைகளைப் படைக்கும் சக்தி தொலைக்காட்சியின் மாபெரும் இசை நிகழ்ச்சியாக இம்முறையும் Shakthi Crown இரண்டாவது அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

இதற்கு முன்னர் சக்தி சுப்பர் ஸ்டார், சக்தி ஜூனியர் சுப்பர் ஸ்டார், இசை இளவரசர்கள் எனும் நிகழ்ச்சிகளை நடத்தி இளவல்களுக்கு வாய்ப்பளித்த சக்தி தொலைக்காட்சி இம்முறை Shakthi Crown Season 02 நிகழ்ச்சியினூடாகவும் சிறந்த குரலை உலகறியச் செய்யவுள்ளது.

இசை இரசிகர்களின் பேராதரவிற்கு மத்தியில் 15 வயதுக்கு மேற்பட்டோரின் பாடும் திறனுக்கு களம் அமைத்து Shakthi Crown இசை நிகழ்ச்சியின் முதல் அத்தியாயம் வெற்றிகரமாக நிறைவுபெற்ற நிலையில் Shakthi Crown Season 02 மாபெரும் ரியாலிட்டி இசை நிகழ்ச்சிக்கான ஆரம்பக்கட்ட குரல் தேர்வுகள் தற்போது அதே உத்வேகத்துடன் ஆரம்பமாகியுள்ளன.

கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள வீரமயிலன் திருமண மண்டபத்தில் இன்று(16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குரல் தேர்வு நடைபெற்றது.

Shakthi Crown Season 02-இன் நாளைய நாளுக்கான குரல் தேர்வு இரத்தினபுரி கேதுமதி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ருவன்வெல்ல, ஹட்டன், கண்டி, மாத்தளை ஆகிய நகரங்களிலும் எதிர்வரும் நாட்களில் குரல் தேர்வு இடம்பெறவுள்ளது.

நாட்டின் திறமைவாய்ந்த Stein கலையகக் குழாத்தினரின் தயாரிப்பில் Shakthi Crown இம்முறை மிளிரவுள்ளமை விசேட அம்சமாகும்.1

5 வயதுக்கு மேற்பட்ட பாடும் திறமையுள்ள அனைவரும் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் தருணமே இது.

போட்டி தொடர்பான தகவல்களை 078 7019128 என்ற WhatsApp இலக்கத்தினூடாக பதிவு செய்துகொள்ளுங்கள்.