ஜனாதிபதி, பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி, பிரதமரின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

by Staff Writer 14-04-2025 | 3:07 PM


Colombo (News1st) மலர்ந்துள்ள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

நாட்டிற்கு தேவையான புதிய பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்ய ஒன்றிணைய வேண்டும் என  ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டையும் மக்களையும் வெற்றிப்பெறச் செய்வதற்காகவும் இந்த புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காகவும் ஒன்றுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியி்ல் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வாழ்வை புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான  மனப்பாங்கு மற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே பொதுவான எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும் என  ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


ஊழல் மற்றும் மோசடி சக்கரத்தில் இருந்து விடுபடுவதற்கு மக்களின் துணிச்சலான முயற்சிகள் புதிய ஆரம்பத்திற்கு வழிவகுத்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது புதுவருட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புலர்ந்திருக்கும் புத்தாண்டில் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிக்கும் இத்தருணத்தில் அனைத்து பிர​ஜைகளும் தமது சமூகங்களில் கௌரவம்,அமைதி மற்றும் பரிவுணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைய அர்ப்பணிப்பு, நம்பிக்கை மற்றும் மீளாற்றலுடன் செயற்பட உறுதி பூணுவோம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.