.webp)
Colombo (News1st) "விசுவாவசு"எனும் நாமத்துடன் புதுவருடம் இன்று அதிகாலை மலர்ந்தது.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கமைய இன்று அதிகாலை 2.29 க்கும், திருக்கணித பஞ்சாங்கத்திற்கமைய அதிகாலை 3.21 க்கும் புதுவருடம் மலர்ந்தது.
சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ இராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் வருடங்களை எமது முன்னோர்கள் அறுபதாக வகுத்துள்ளதுடன் பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய வரையில் அந்த அறுபது ஆண்டு பட்டியல் நீள்கிறது.
படைத்தற் கடவுளான பிரம்மா இந்த அண்டத்தை சித்திரை மாதம் முதல் நாளில் படைத்ததாக புராணங்கள் பறைசாற்றுகின்றது.
சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் இன்பம் பொங்கும் வருடமாக அமைய நியூஸ் !ஃபெஸ்ட்டின் நல்வாழ்த்துகள்.