பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

by Staff Writer 13-04-2025 | 5:27 PM

Colombo (News1st)கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் வௌியிட தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.

ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகளை வௌியிட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது காணப்படும் நடைமுறை சிக்கல்களுக்கு அமைய 20ஆம் திகதியின் பின்னரே பரீட்சை பெறுபேறுகளை வௌியிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.