.webp)
Colombo (News1st)தேஷபந்து தென்னக்கோனை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேஷபந்து தென்னக்கோனை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம ஹோட்டல் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
20 நாட்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் தேஷபந்து தென்னகோன் கடந்த மார்ச் 19 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து நீதிமன்றில் சரணடைந்தார்.
பொலிஸ் மாஅதிபரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச கடந்த 03 ஆம் திகதி உத்தரவிட்டார்.