ட்ரம்ப்பின் புதிய தீர்வை வரி 90 நாட்களுக்கு இடைநிறுத்தம்

by Staff Writer 10-04-2025 | 7:58 AM

Colombo (News 1st) அமெரிக்காவினால் ஏனைய நாடுகளின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட மேலதிக தீர்வை வரியை 90 நாட்களுக்கு இடைநிறுத்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அனைத்து நாடுகளின் மீதும் விதிக்கப்பட்ட 10 வீத தீர்வை வரி தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீன இறக்குமதிகள் மீது விதிக்கபட்ட தீர்வை வரி உடன் அமுலுக்கும் வரும் வகையில் 125 வீதமாக அதிகரிப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு எதிராக அந்நாட்டு இறக்குமதிகள் மீது 84 வீத வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்திருந்த நிலையில் சீனா மீதான வரிகளை மேலும் அதிகரிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

புதிய வரிகளை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பு வௌியாகியவுடன் அமெரிக்க பங்குச்சந்தைகள் பாரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.