.webp)
Cololmbo (News1st)மைக்ரோ ரக கைத்துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரை வழியனுப்பி வைப்பதற்காக சென்ற போதே குறித்த வர்த்தகர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 41 வயதான நபர் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.