இலங்கைக்கு கிடைத்த வாய்ப்பு

இலங்கைக்கு 2027 BIMSTEC விவசாய மாநாட்டை நடத்த வாய்ப்பு

by Staff Writer 10-04-2025 | 7:48 AM

Colombo (News 1st) 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிம்ஸ்டெக்(BIMSTEC) விவசாய மாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளது.

நேபாளத்தின் காத்மாண்டு நகரில் நேற்று(09) நடைபெற்ற விவசாய மாநாட்டின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த மாநாட்டில் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன நிகழ்நிலை(Zoom) ஊடாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.