எஸ்.வியாழேந்திரன் பிணையில் விடுவிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிணையில் விடுவிப்பு

by Staff Writer 09-04-2025 | 7:56 PM

Colombo (News 1st) பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று(09) விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு நேற்று(08) பிணை வழங்கப்பட்ட போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தவறியதால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

50,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான 05 சரீரப்பிணைகளில் சந்தேகநபரை விடுவிப்பதற்கு நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.