.webp)
Colombo (News1st)பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிதி மோசடி குற்றச்சாட்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமர சம்பத் தசநாயக்கவுக்கு இன்று (08) பிணை வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், பதுளை நீதிமன்றத்தில் நேற்று (07) விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டதால் தொடர்ந்தும் அவர் சிறையிலிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.