தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான - பிரேரணை

தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை இன்று பாராளுமன்றில்..

by Staff Writer 08-04-2025 | 10:26 AM

Colombo (News1st) பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்காக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென முன்வைக்கப்பட்ட பரிந்துரை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய இது தொடர்பான பிரேரணை இன்று மாலை 5.30க்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குற்றச்செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் தும்பற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம ஹோட்டலொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர்  உயிரிழந்த மற்றும் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.