.webp)
Colombo (News1st) 12 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்தது.
09 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார கூறினார்.
மேலும் 13 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சகர் ப்ரதீப் புஷ்பகுமார தெரிவித்தார்.
இவற்றில் 07 இலட்சம் தபால் மூல வாக்குச்சீட்டுகளும் அடங்குகின்றன.