பென்குயின்கள் வசிக்கும் தீவுகள் மீதும் வரி

பென்குயின்கள், கடல் சிங்கங்கள் மாத்திரம் வசிக்கும் தீவுகள் மீதும் வரி

by Staff Writer 07-04-2025 | 5:08 PM

Colombo (News1st) 

மக்கள் வசிக்காத தீவுகளின் மீது வரி விதிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட தீர்மானத்திற்கு அந்நாட்டின் வர்த்தக செயலாளர் Howard Lutnick ஆதரவு வழங்கியுள்ளார்.

Heard மற்றும் McDonald தீவுகளினூடாக அமெரிக்காவிற்குள் பொருட்கள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்காகவே மக்கள் வசிக்காத தீவுகள் மீதி வரி விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பென்குயின்கள் மற்றும் கடல் சிங்கங்கள் மாத்திரம் வசிக்கும் தீவுகளின் மீதும் அமெரிக்கா வரி விதித்தமை ஆச்சரியமளிப்பதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.