.webp)
Colombo(News1st) அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த இறக்குமதி வரிகளால் சர்வதேச விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க தலைநகர் வொஷிங்டனிலும் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தனது X வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை வௌியிட்டுள்ளார்.