தேர்தல் பதாகைகளை அகற்ற 2,000 பேர்

தேர்தல் பதாகைகளை அகற்ற 2,000 பேர்

by Staff Writer 06-04-2025 | 6:14 PM

Colombo (New1st) தேர்தல் பதாகைகளை அகற்றுவதற்காக 2,000 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான பொலிஸ் தலைமையகத்திற்கு நால்வர் ஈடுபடுத்தப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

ஏனைய பொலிஸ் நிலையங்களுக்காக மூவரும் கிராமிய மட்ட பொலிஸ் நிலையங்களுக்காக இருவரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மே மாதம் 8திகதி வரை அமுலாகும் வகையில் தற்காலிக அடிப்படையில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் 605 பொலிஸ் நிலையங்களுக்கு இவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.