சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 06-04-2025 | 6:21 PM

Colombo (News1st) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியை அண்மித்து இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனைகளை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று(06) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாணிக்கபுரம், வள்ளுவர்புரம், இளங்கோபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆரப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மாணிக்கபுரம் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.