அரச நிறுவன பிரதானிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்ப

அரச நிறுவன பிரதானிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 06-04-2025 | 6:18 PM

Colombo (News1st) அரச நிறுவனங்களின் பிரதானிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 8ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலப்பகுதியில் அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

செய்தித் தொகுப்பு