.webp)
Colombo (News1st) அமெரிக்க தீர்வை வரி தொடர்பில் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் அடுத்த வாரம் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதன்போது பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர், பேராசிரியர் அனில் ஜயந்த அரசாங்கத்தின் யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த குழு நாளாந்தம் கூடி இதற்கான யோசனைகளை தயாரிப்பதாக பிரதியமைச்சர் கூறினார்.
குழுவின் உறுப்பினர்கள் நேற்று(05) மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
புதிய தீர்வை வரியால் ஏற்றுமதியாளர்கள் மற்றும் அந்நிய செலாவணிக்கு ஏற்படவுள்ள பாதிப்பு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்காக 44 வீத தீர்வை வரியை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.