திருக்குறளுடன் கருத்து வௌியிட்ட இந்திய பிரதமர்

திருக்குறளுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட இந்திய பிரதமர்

by Staff Writer 05-04-2025 | 7:48 PM


 

Colombo (News1st)
''செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
        வினைக்கரிய யாவுள காப்பு''​

என்ற திருக்குறளுடன் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்டார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

சவால்களையும், எதிரிகளையும் எதிர்கொள்ளும் போது ஒரு உண்மையான நண்பனையும், நட்பின் பாதுகாப்பையும் விட வலுவான உறுதிப்பாடு வேறு எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.


கிழக்கு மாகாணத்தின் சமூக, பொருளாதார  மேம்பாட்டிற்காக  2.4 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்காக பத்தாயிரம் வீடுகளின் நிர்மானப்பணிகள் விரைவில் நிறைவடையும் எனவும் அவர் கூறினார்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா உதவிகளை வழங்குவதாகவும், நுவரெலியா சீதா எலிய ஆலயத்தின் நிர்மானபணிகளுக்கும், அனுராதபுரம் ஜய சிறிமகாபோதி வளாகத்தில் புனித  நகர கட்டுமானத்திற்கும், இந்தியா ஆதரவு வழங்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


தமிழ் மக்களின் அபிலா​ஷைகளைப் பூர்த்தி செய்வதுடன், இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதுடன், மாகாண சபைத் தேர்லை நடத்துவதற்கான உறுதிப்பாட்டை அரசாங்கம் வழங்குமெனவும் தாம் எதிர்ப்பார்ப்பதாக  இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதன்பொது சுட்டிக்காட்டினார். 

ஏனைய செய்திகள்