தாயகம் திரும்பும் ரோஹிங்கியா அகதிகள்

தாயகம் திரும்பும் ரோஹிங்கியா அகதிகள்

by Staff Writer 05-04-2025 | 5:14 PM

Colombo (News1st) மியன்மாரை விட்டு வௌியேறி பங்களாதேஷில் தஞ்சமடைந்த 180,000 ரோஹிங்கியா அகதிகள் தாயகம் திரும்ப தகுதியுடையவர்கள் என மியன்மார் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

பேங்கொக்கில் நடைபெற்ற தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் தாய்லாந்து, நேபாளம், பூட்டான், இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், இந்தியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொண்டனர்.

2017 ஆம் ஆண்டு மியன்மாரில் ஏற்பட்ட இராணுவ ஒடுக்கு முறையிலிருந்து தப்பிச் சென்ற சுமார் 70,000 ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்தமை குறிப்பிடத்தக்கது.