.webp)
Colombo (News1st)இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியாவின் உயர்மட்டக் குழுவினரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவேற்றார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்றது.
இந்திய பிரதமருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்பட்டது.
இதன்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், இந்தியப் பாதுகாப்பு செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இராஜதந்திரிளை அறிமுகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” எனும் எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.