.webp)
Colombo (News1st)அமெரிக்க தீர்வைவரி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று(05) சந்தித்தார்.
புதிய தீர்வை வரிகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னெடுக்கபடவேண்டிய விடயங்கள் தொடர்பாக குறித்த குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் இதன்போது ஆராயப்பட்டன.
வரிச்சலுகையை பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை விரைவாக முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இலங்கை பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் 44 வீத தீர்வை வரியை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.