இலங்கை ஏற்றுமதி சபையின் தீர்மானம்

ஜப்பான், இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய இலங்கை ஏற்றுமதி சபை தீர்மானம்

by Staff Writer 03-04-2025 | 6:41 AM

Colombo (News 1st) ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய இலங்கை ஏற்றுமதி சபை தீர்மானித்துள்ளது.

ஜப்பானின் அழைப்பின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக  சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.

கைத்தொழில் உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் வௌிநாட்டு சந்தை நிறுவனம், ஜப்பானின் பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதி மற்றும் இலங்கை ஏற்றுமதி சபையின் அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் அண்மையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையில் கைத்தொழில் உற்பத்திகளுக்கான பொருள் ஏற்றுமதியை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.