கிரான்குளம் வாகன விபத்தில் ஒருவர் பலி

கிரான்குளம் வாகன விபத்தில் ஒருவர் பலி

by Staff Writer 03-04-2025 | 9:50 AM

Colombo (News1st) மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியது.

இதனால் மின் கம்பம் உடைந்து தொலைபேசி கம்பத்தில் வீழ்ந்ததில் அதிலிருந்த இணைப்புக் கம்பிகள் வீதியில் வீழ்ந்துள்ளன.

இதன்போது அவ்வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் இணைப்பு கம்பிகளில் சிக்கி வீழ்ந்தமையால் மற்றுமொரு விபத்தும் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபரும் காயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.