அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 10 வீத தீர்வை வரி - டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 03-04-2025 | 7:38 AM

Colombo (News 1st) அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 வீத தீர்வை வரியை விதிப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

இந்த புதிய வரிகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 வீத வரியும் ஜரோப்பிய ஒன்றியத்தின் மீது 20 வீத வரியும் ஜப்பான் பொருட்களுக்கு 24 வீதமும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதும் 26 வீத வரியும் தென் கொரிய பொருட்களுக்கு 25 வீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.