பொருத்தமற்ற தே.எண்ணெய் விற்றால் சட்ட நடவடிக்கை

பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்றால் சட்ட நடவடிக்கை

by Staff Writer 01-04-2025 | 12:04 PM

Colombo (News1st) பண்டிகை காலத்தில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவிக்கின்றது.

நாடளாவிய ரீதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தேங்காய் எண்ணெய் மாதிரிகள் பரிசோதிக்கப்படும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டது.

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறியும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

நுகர்வுக்குப் பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.