.webp)
Colombo (News1st) தெற்கு அதிவேக வீதியில் களனிகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று(01) காலை இடம்பெற்ற விபத்தில் வௌிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
04 வௌிநாட்டவர்கள் பயணித்த வேன் - லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இடத்தில் மற்றுமொரு வாகன விபத்தும் இடம்பெற்றுள்ளது.
வேன் - கார் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறினர்.