நீ.ம அவமதித்த குற்றச்சாட்டு - பெண் சட்டத்தரணி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள பெண் சட்டத்தரணியை விடுவிக்க உத்தரவு

by Staff Writer 31-03-2025 | 5:54 PM

Colombo (News1st) நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணியை உடனடியாக விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(31) உத்தரவிட்டுள்ளது.

மரியாதையுடன் நீதிமன்றத்தை அழைக்கத் தவறியமை மற்றும் தலைதாழ்த்தி வணங்கத் தவறியமை ஆகியவற்றுக்காக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவன்துருகொட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

அதன் பின்னர் குறித்த குற்றப்பத்திரிகை தொடர்பில் சட்டத்தரணிக்கு பிணை வழங்கப்பட்டது.

எனினும் மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை அவர் பூர்த்திசெய்யத் தவறியமையால் குறித்த பெண் சட்டத்தரணி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.