நீர் விநியோக இணைப்பிற்கான விண்ணப்பப்படிவங்கள்

புதிய நீர் விநியோக இணைப்பிற்கான விண்ணப்பப்படிவங்கள் இணையவழி ஊடாக..

by Staff Writer 30-03-2025 | 1:13 PM

Colombo (News1st) புதிய நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்ளவதற்கான கோரிக்கை நடைமுறைகளை இணையவழி ஊடாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

WATERBOARD.LK என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இதற்கான விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டது.

விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பித்த பின்னர் 02 வாரங்களுக்குள் புதிய நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்தது.

இதற்கான ஆரம்ப வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனூடாக எதிர்வரும் வாரங்களில் நீர் விநியோகத்தை பெற்றுக்கொள்ள முடியும் என புதிய பயனாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.