.webp)
Colombo (News1st)யாழ் - ஊர்காவற்றுறை பாலக்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புளியங்கூடல் தெற்கு ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த 82 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.