புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப்பொதி

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப்பொதி

by Staff Writer 26-03-2025 | 6:10 PM

Colombo (News1st) தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தகைமையுடைய பயனாளிகளுக்கு "காலத்தின் தேவைக்கான உணவுப்பொதியை" சதொச மூலம் வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அதற்கமைய 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய "காலத்தின் தேவைக்கான உணவுப்பொதி", சலுகை விலையில் 2,500 ரூபாவிற்கு விநியோகிக்கப்படவுள்ளது.

இதற்காக அஸ்வெசும திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பித்துள்ள 812,753 விண்ணப்பங்களில் தகைமையுடைய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் முதலாம் முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சதொச கூட்டுறவு நிலையங்கள் ஊடாக இந்த உணவுப்பொதியை பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும்.