.webp)
Samsung நிறுவனத்தின் இணை பிரதம நிறைவேற்று அதிகாரியான ஹான் ஜாங்-ஹீ (Han Jong-hee) காலமானார்.
மாரடைப்பினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக Samsung நிறுவனத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
63 வயதான இவர் நுகர்வோர் மின்னணு மற்றும் தொலைபேசி கருவிகள் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்தார்.
Samsung நிறுவனத்தின் அடுத்த பிரதம நிறைவேற்று அதிகாரி தொடர்பில் இதுவரையில் அறிவிப்பு வௌியாகவில்லை.