வைத்தியசாலைக்கான C.T SCAN கொழும்பு துறைமுகத்தில்

வைத்தியசாலைக்கான C.T SCAN இயந்திரம் 06 வாரங்களாக கொழும்பு துறைமுகத்தில்...

by Staff Writer 25-03-2025 | 11:17 AM

Colombo (News1st) களுத்துறை பொது வைத்தியசாலைக்காக கொண்டுவரப்பட்ட C.T SCAN இயந்திரம் 06 வாரங்களாக கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ளது.

குறித்த இயந்திரம் கடந்த மாதம் 14 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கம் தெரிவித்தது.

அதனை விடுவிப்பதற்கான தாமதக் கட்டணமாக ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

களுத்துறை பொது வைத்தியசாலையில் காணப்பட்ட C.T SCAN இயந்திரம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.