.webp)
Colombo (News1st) நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் 6 தசம் 7 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
நில அதிர்வினால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
4,700க்கும் மேற்பட்டோர் நிலஅதிர்வை உணர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.
இதனிடையே, நியூசிலாந்தின் Southland மற்றும் Fiordland பகுதிகளில் வசிப்பவர்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.