கச்சதீவை விவகாரம் ; வழக்கு ஒத்திவைப்பு

கச்சதீவை மீட்குமாறு வலியுறுத்தி இந்திய உச்ச நீதிமன்றினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 25-03-2025 | 10:18 PM

Colombo (News 1st) கச்சதீவை மீட்குமாறு வலியுறுத்தி இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

5 வருடங்களின் பின்னர் இந்த வழக்கு இன்று(25) மீண்டும் விசாரணைக்கு வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கச்சதீவை மீட்குமாறு ​கோரி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா ஜெயராம் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் தாக்கல் செய்த மனு 5 வருடங்களின் பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் இது தொடர்பிலான மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி பி.வில்சன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர் முத்துவேல் கருணாநிதியின் சார்பில் இந்த விடயம் தொடர்பில் மற்றுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

மனுதாரர் தற்போது உயிருடன் இல்லை என்பதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலுவை மனுதாரராக இணைத்துக்கொள்ள வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்ததுடன் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்