.webp)
Colombo (News1st)அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை வேறு பணிகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் தீர்மானிக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை பொருளாதார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்கான இயலுமையை கண்டறிவதற்காக ஐவரடங்கிய குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.