.webp)
Colombo (News1st)பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை கண்டறிவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நாடளாவிய ரீதியில் இன்று(25) முதல் விசேட சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.
நியாயமற்ற விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.