.webp)
Colombo (News1st) வாரியபொலவில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் விமானிகளைப் பயிற்றுவிக்கும் K8 ரக விமானத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வாரியபொல மினுவாங்கெட்ட வெலகெதர பகுதியிலுள்ள தென்னந்தோப்பில் இலங்கை விமானப்படையின் விமானிகளைப் பயிற்றுவிக்கும் K8 ரக விமானம் கடந்த வௌ்ளிக்கிழமை (21) விபத்துக்குள்ளானது.
விபத்தில் இரண்டு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 07 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.