நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய வெளிநாட்டு தூதுவர்கள்

by Staff Writer 24-03-2025 | 5:48 PM

Colombo (News1st) இலங்கைக்கான 3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று(24) கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பிரான்ஸ், பலஸ்தீனம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தூதுவராக Remi Lambert, பலஸ்தீன தூதுவராக Ihab I.M. Khalil, நேபாள தூதுவராக கலாநிதி Purna Bahadur Nepali ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.