.webp)
Colombo (News1st) ஜப்பானின் (Okayama) ஒகாயாமா மாகாணத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 2800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காட்டுத்தீயினால் இதுவரை 250 ஹெக்ரயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியது.
குறித்த தீப்பரவலைக் கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
தீயணைப்பு படைகள் ஹெலிகொப்டரின் உதவியுடனும் தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் ஜப்பானின் வடக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 3,000 ஹெக்ரயர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளன.